Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மன்மோகன் சிங்கால் அஸ்ஸாம் பலனடையவில்லை... ஸ்ம்ரிதி இரானி!

லக்கிம்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மாநிலங்களவை எம்.பி.யாக இரண்டு முறை தேர்வு செய்த அஸ்ஸாம் மாநிலம், அவரால் எந்தப் பலனும் அடையவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி குற்றஞ்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் பலரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களும் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் லக்கிம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி பேசும்போது, ''லக்கிம்பூர் என்பது செல்வக் கடவுளான லக்ஷ்மியின் ஊர் என்ற அடையாளம் கொண்டதாகும்.

ஆனால், இங்குள்ள படித்த இளைஞர்கள் அனைவரும் வேலை தேடி தங்கள் சொந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாய நிலையே காணப்படுகிறது. உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவம், திறன் வளர் பயிற்சிகளை அளிப்பதும்தான் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் ழ் மட்டுமே இது சாத்தியமாகும்.

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தும்கூட அஸ்ஸாம் மாநிலத்துக்கு பெரிய அளவில் எதையுமே செய்யவில்லை. ஆனால், மத்திய பாஜக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த 2016-ம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்துக்கு திருப்பத்தை ஏற்படுத்தும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இங்கு பாஜக ஆட்சி மலர்ந்ததும் மாற்றம், முன்னேற்றம், வளம் ஆகியவற்றை நோக்கி அஸ்ஸாம் வீறுநடை போடும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மாநிலங்களவைக்கு இரண்டு முறை அனுப்பி வைத்தது அஸ்ஸாம் மாநிலம். ஆனால், இந்த மாநிலம் இப்போது எதிர்கொண்டுள்ள சவால்களை முன்கூட்டியே முறியடிக்க அவர் எதையும் செய்யவில்லை. அஸ்ஸாம் மாநிலம் அவரால் எந்தவித பலனையும் அடையவில்லை" என்று குற்றஞ்சாட்டி பேசினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ