Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக அரசுக்கு எதிராக 25 ஊழல் பட்டியல்... வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஈவிகேஎஸ்

அதிமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை, கடந்த 2.5.2015 அன்று ஆளுநர் ரோசையாவிடம் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் வழங்கினார். இதன் மீது ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால், இந்த ஊழல் பட்டியலை சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் வெளியிட்டார்.

அந்த பட்டியலில், செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை, மின் கொள்முதலில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல், உயர்கல்வித்துறையில் ஊழல், ஆவின் பால் கலப்பட ஊழல், லேப்டாப் ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், பாதாளச் சாக்கடை ஊழல், ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம், டாஸ்மாக் ஊழல், நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல், தொழிற்துறையில் ஊழல், மின்சார வாரிய ஊழல், செய்தித்துறையில் ஊழல், போக்குவரத்துத்துறை ஊழல், நூலகத்துறையில் ஊழல், மருத்துவத்துறையில் ஊழல், பத்திரப்பதிவுத்துறை ஊழல், ரியல் எஸ்டேட் ஊழல், வணிக வரித்துறை ஊழல், கிரானைட் ஊழல், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல், இஎஸ்ஐ மருத்துவமனை ஊழல், பொது விநியோகத்துறையில் ஊழல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், "அதிமுக அரசு மீது 25 ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் ஏற்கனவே அளித்துள்ளோம். அந்த ஊழல் பட்டியல் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேளாண் பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலின்போது ஊழல் புகார் முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ