Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிக பொதுக்குழுவில் பார்த்தசாரதி: விஜயகாந்த் முன்னிலையில் நிர்வாகிகள் ஆவேசத்தால் பரபரப்பு!

பெரம்பலூரில் நடந்து வரும் தேமுதிக பொதுக்குழுவில், கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நிர்வாகிகள் ஆவேசமாக பேசி வருவதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.
 

தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 26 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகள்,  செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. காலை 10.45 மணிக்கு மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் வந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.
 

பின்னர் கூட்டம் தொடங்கியதும், கடலூர், ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆவேசத்துடன் பேசினர்.

"ஜெயலலிதா ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் விஜயகாந்த்தான். எப்படி உழைத்து ஜெயலலிதாவை அரியணை ஏற்றினார். நன்றி கெட்ட ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும். விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது. சட்டசபையில் மக்கள் பிரச்னையை பற்றி பேசிய எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறையில்லாத ஆட்சியை அகற்ற வேண்டும்" என்றனர்.

பொதுக்குழுவில் பார்த்தசாரதி எம்எல்ஏ

சென்னையில் பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டிருந்த பார்த்தசாரதி எம்எல்ஏ உள்பட 19 பேருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம்,நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பார்த்தசாரதி எம்எல்ஏ, இன்று காலையில் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பெரம்பலூரில் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நண்பகல் 12 மணிக்கு வந்தடைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். பிற்பகல் 1 மணிக்கு விஜயகாந்த் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது, கூட்டணி குறித்து அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-சி.ஆனந்தகுமார், எம்.தீலிபன்

படங்கள்:
தே.தீட்சித்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ