Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டணி முடிவு விஜயகாந்த்துக்கு அதிகாரம்... வேறு என்ன இருக்கிறது பொதுக்குழுவில்...?

ட்டமன்ற தேர்தலில் தேமுதிக எத்தகையை முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த முழு அதிகாரமும் விஜயகாந்த்துக்கு வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூரில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், காந்தியவாதி சசிபெருமாள், நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மற்றும் மழையால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

* ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு உதவி, வெள்ளத்தின் போது மீட்பு பணியாற்றிய கழக தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாட் வரியை ரத்து செய்வதோடு வட்டியில்லாத கடனும் வழங்க வேண்டும்.

* விவசாயிகளுக்கு வழங்கப்படும் மழை நிவாரண தொகையை அதிகரிக்க வேண்டும்.

* வெள்ளத்தின்போது நிவாரண பொருட்களில் அதிமுகவினர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஓட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
 

* தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டு அனுமதி அளித்த பிரதமருக்கும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

* தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கும் சிங்கள ராணுவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மக்களை ஏமாற்றும் நோக்கில் மின்வெட்டை தற்காலிகமாக சரி செய்வதற்காக, மக்களின் வரிப்பணத்தில் அதிக விலைகொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வது கண்டிக்கத்தக்கது.

* கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1400 மற்றும் 1470 என வழங்குவதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.

* அதிமுக அரசு வாங்கியுள்ள கடன் தொகையால், தமிழகத்தில் சாலை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாமல், புதிய தொழிற்சாலைகள், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முடியாமல், தமிழகத்தின் ஓட்டுமொத்த வளர்ச்சியும் முடங்கி போயுள்ளது கண்டிக்கத்தக்கது.

* வேளாண் செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி, வீட்டு வசதி துறை செயற்பொறியாளர் பழனிசாமி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அறிவொளி, டிஎஸ்பி விஷ்ணுப்ரியா, உணவு வழங்கல் துறை ஊழியர் இளங்கோ ஆகியோர் ஊழலுக்கு துணை போகாததால் நெருக்கடி கொடுக்கப்பட்டு மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கண்டும் காணாமல் இருக்கின்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

* விலைவாசி உயர்வை நியாயப்படுத்தும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

* தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழித்திட லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவிட வேண்டும்.

* சட்ட மன்றத்தில் 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவது போல, தமிழக மக்களுக்கு 111 (நாமம்) போட்டு ஏமாற்றியதற்கும், எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு, பேரழிவை ஏற்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

* தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியை அகற்ற இப்பொதுக்குழு ஏகமனதாக உறுதி ஏற்கிறது.

* சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எத்தகையை முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த முழு அதிகாரத்தையும் இப்பொதுக்குழு தலைவர் விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்டது என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-சி.ஆனந்தகுமார், எம்.தீலிபன்

படம்:
தே.தீட்சித் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close