Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி... ஓட்டு அரசியலுக்காக? இல்லை என்கிறது பா.ஜ.க.!

சென்னை: கலாசாரத்தின் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஓட்டு அரசியலுக்காக இல்லை என்று பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி எம்.பி. தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி எம்.பி., சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மத்திய அரசு கலாசாரத்தின் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. ஓட்டு அரசியலுக்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ஒருவருக்கொருவர் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை அளித்து வருகிறது. குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்தவும், காஞ்சிபுரத்துக்கு பாரம்பரிய நகரம் என்று பெயர் சூட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே 2-வது மாநிலமாக தமிழ்நாட்டில்தான் 12 ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பின்போது சிறப்பு பாஸ்போர்ட் முகாம்கள், நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவத்தை அனுப்பி வைத்தது போன்ற பல்வேறு பணிகளை மத்திய அரசு தன்னை ஈடுபடுத்தி கொண்டது. மத்திய அரசு தொடங்கிய ஜன்தன் யோஜனா (மக்கள் நிதி) திட்டத்தால்தான், தமிழக மக்கள் வெள்ள நிவாரண நிதியை வங்கிகள் மூலம் எளிதாக பெற முடிந்தது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ