Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன்: தொண்டர்களிடம் ஜெ. காணொலி பேச்சு!

தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன் என்று காணொலி காட்சி மூலம் தொண்டர்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தேனி, திண்டுக்கல், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 6 மாவட்ட அதிமுக அலுவலகங்கள் மற்றும் எம்ஜிஆர் சிலைகளை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

அப்போது, பேசிய அவர், தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் கூறினார்.

மேலும், அதிமுக இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்றும் என்றும், மகத்தான வெற்றியை பெற தொண்டர்கள் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

படங்கள்: சு.குமரேசன்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close