Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பொங்கல் விளையாட்டு என்ற தலைப்பில் ஏறுதழுவல் அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும்'!

சென்னை: பொங்கல் விளையாட்டு என்ற தலைப்பில் ஏறுதழுவல் அவசரச் சட்டம் பிறப்பிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசிய பேரியக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவ்வியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஏறுதழுவலுக்கு எதிராகச் செயல்படுபவர்களில் பெரும்பாலோர் தமிழர் இன அடையாளத்திற்கும் தமிழர் பெருமிதங்களுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் எதிரானவர்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உளவியலைப் புரிந்து கொண்டு அனைத்துக் கட்சிகளும் ஏறுதழுவலை ஆதரிக்கின்றன. இந்தியத் தேசியம் – தமிழினத்தின் பகைக் கருத்தியல் என்பதை ஏறுதழுவல் விளையாட்டிற்கு வடநாடு காட்டும் எதிர்ப்பின் மூலம் மேலும் புரிந்து கொள்ள முடியும்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளபடி, மாநில அதிகாரப் பட்டியலில்வரும் விளையாட்டு வகையில் ஒன்றாக ஏறுதழுவலை ஏற்று இதனைப் ‘பொங்கல் விளையாட்டு’ என்ற தலைப்பின்கீழ் நடத்திட தகுந்த விதிமுறைகளை உருவாக்கி, தமிழ்நாடு அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அதற்கு எதிர்ப்பு வந்தால் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." என்று வலியுறுத்தியுள்ளார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close