Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து மதுரையில் வரும் 17ம் தேதி வைகோ உண்ணாவிரதம்!

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் வரும் 17 ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தி வந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழர்களின் வாழ்வோடு ஜல்லிக்கட்டு இணைந்தது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் ஜனவரி 17 ஆம் தேதி மதுரை மாநகரில், ஓபுலா படித்துறை அருகில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்.

இந்த அறப்போரில், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களும், தொண்டர்களும், உணர்வாளர்களும் நானும் பங்கேற்கிறோம். " என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close