Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரட்டப் பட்டவர்களை உள்ளே கூப்பிடுங்கம்மா: ஜெயலலிதாவுக்கு தொண்டர்களின் கடிதம்

ஜல்லிக்கட்டுவுக்கு தடையை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடிதம் எழுதிக் கொண்டிருக்கிற வேளையில் கார்டனுக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது என்கிறார்கள்

என்னாது, லெட்டருக்கே லெட்டரா?... கடிதம் குறித்து ஏரியாவில் விசாரித்தோம், ஏறக்குறைய கடிதத்தில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்கள் ர.ர.கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
 
அடிக்கடி வர்ற மொட்டைக் கடுதாசிதாங்க, இந்த முறை கொஞ்சம் டீட்டெயில்டா தட்டி விட்டிருக்காங்க... ஆனா, அவ்வளவும் தேர்தலை மனதில் கொண்டு சீனியரான தொண்டர்கள் உணர்வுப் பூர்வமாக அனுப்பிய கடுதாசிதான் அது... என்கின்றனர்.ஆமாம், கடிதத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது...

.... அம்மா, நாம இப்போ ரொம்ப டல்லாகிட்ட மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் காட்டும் வேலையில் எதிராளிகள் களத்தில் இறங்கியிருக்கின்றனர். மற்ற நேரமாக இது இல்லை. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் எடுக்கும் மதிநுட்பமான சாதுர்யமான முடிவால்தான் கழகம் இத்தனை பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது, அதை நாங்கள் ஒரு போதும் மறந்து விட முடியாது. அதே சமயம், நம்மிடமிருந்து ஒதுங்கியும், விலகியும் இருக்கிறவர்கள் நேற்றுவரை நம்முடைய பலமாக இருந்தவர்கள், நம்முடைய பலமும், பலவீனமும் அறிந்தவர்கள். ஆனால், அவர்கள் இப்போது நம்மோடு இல்லை. நீங்கள் நினைப்பது புரிகிறது, கழகத்தை வைத்துதான் அவர்களே தவிர,  அவர்களை நம்பி கழகம் இல்லை என்றுதானே நினைக்கிறீர்கள்... உண்மைதான் அம்மா ! போனதெல்லாம் போகட்டும், பழசை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?

செங்கோட்டையன், வக்கீல் ஜோதி, கருப்பசாமி பாண்டியன்,  திருச்சி செல்வராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சேடப்பட்டி முத்தையா, செல்வகணபதி, நயினார் நாகேந்திரன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் இப்படி ஏராளமானவர்களை மாற்று கூடாரத்துக்கும், நம்மிலிருந்தே எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் ஒதுக்கியும் வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோமே அம்மா...நீங்கள் கூப்பிடுவதாக ஒரு சிக்னல் கிடைத்தால் கூட போதுமே அம்மா, அவர்கள் ஓடோடி தாய் வீட்டுக்கு வந்து விடுவார்களே... நெல்லை மாவட்டத்தில் கோலோச்சிய நயினார் நாகேந்திரன் செய்த பாவம்தான் என்ன? ஏன், இரண்டு முறை எம்.பி.யாக உங்களால் நிறுத்தப் பட்டவரும், மந்திரியாக இருந்தவருமான கண்ணப்பன் செய்த பாவம்தான் என்ன ?  காங்கிரசின் ப.சிதம்பரத்தை, அத்தனை நெருக்கடியான சூழலிலும் எதிர்த்து கவுன்ட் கொடுத்தவர்தானே கண்ணப்பன்... சென்னையில் தளபதிபோல இருந்த சேகர்பாபு அங்கே நீங்கள் நினைப்பது போல் சந்தோஷமாக இல்லை அம்மா... ஒரே ஒரு முறை அவர்களை தாயுள்ளத்தோடு கூப்பிட்டுப் பாருங்களேன், அம்மா... சி.வி.சண்முகம், டாக்டர் ராமதாசுக்கு அவ்வளவு தூரம் கவுன்ட் கொடுத்தது சொந்தப் பகை மட்டும்தான் காரணமா, இல்லையே அம்மா... உங்களிடம் நல்ல பெயரை வாங்கத்தானே அவ்வளவு தூரம் அந்த கொலைமுயற்சி வழக்கை கையிலெடுத்தார்.  அம்மா, நம் தொண்டர்கள் அனைவருமே நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும்... ஆடு என்றால் ஆடுவார்கள்... நிறுத்து என்றால் நிறுத்துவார்கள்... இப்போது உங்களுக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் பலர் மக்களோடு நெருக்கத்தில் இல்லாமல் இருக்கிறவர்களே... எஞ்சியிருக்கும் ஒரு சிலரை கையில் வைத்துக்கொண்டு தேர்தலை எதிர் கொள்வது அத்தனை சரியானதாக எங்கள் மனதுக்குப் படவில்லை அம்மா...

அம்மா,  இந்த ஒரே ஒருமுறை  அவர்களை அன்போடு கூப்பிடுங்கள், தேர்தல் பணியைச் செய்யச் சொல்லிக் கட்டளையிடுங்கள், அப்புறம் பாருங்கள்... இனி,  கோட்டை நமக்குத்தான் நிரந்தரம் அம்மா....

இப்படிப் போகிறது அந்தக் கடிதம். இது உள்குத்து கடிதமா, உண்மையான நிலவர (கடித) மா என்பது போகப் போகத்தான் தெரியும்

ந.பா.சேதுராமன் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ