Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம்: லாலுபிரசாத்

பாட்னா: மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம் என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார்.

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக பாட்னாவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டம் நடத்துவோம். விரைவில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நாடு தழுவிய போராட்டத்தையும் தொடங்குவேன். பீகார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எனது மகன்கள் இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

56 அங்குல மார்பு என்னிடம் இருக்கிறது என்று முன்பு நீங்கள் (மோடி) பெருமிதத்துடன் கூறினீர்கள். எல்லைக்கு அப்பால் இருந்து யாராவது நம்மிடம் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என வீரமாகவும் பேசினீர்கள். இன்றோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் நுழைந்து பதன்கோட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள். நமது தீரமிக்க ராணுவ வீரர்களை கொல்கிறார்கள்.

பா.ஜ.க.வின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை. அதனால், பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். நானும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அஸ்தினாபுரத்தில் (டெல்லி) இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம். எனக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே எந்தவித கருத்துவேறுபாடும் கிடையாது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ