Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளங்கோவனை மாற்றும் எண்ணம் ராகுல் காந்திக்கு இல்லையாம்!

புதுடெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மாற்றும் எண்ணம் இல்லை என்று  காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த செய்தியாளர்களை,  டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

அப்போது அவர், ''தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்றும் எண்ணம் இல்லை. தேர்தல் வரும் சமயத்தில் மாநிலத் தலைமையில் மாற்றம் தேவையில்லை என்று கருதுகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், முன்னாள் மாநிலத் தலைவர்கள், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை வரும் 20-ம் தேதி எனது வீட்டில் ஆலோசனை நடத்த வருமாறு அழைத்துள்ளேன். அதில், கட்சி வளர்ச்சியை  கருத்தில் கொண்டு,  கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக  செயல்படுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தவுள்ளேன்.

அதன் பின்னர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக,  மாநிலத் தலைமை எடுக்கும் முடிவைக் கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வை எதிர்ப்பது போல, தி.மு.க.வை எதிர்க்காதது மாநிலக் கட்சித் தலைமையின் உரிமைக்கு உள்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நான் ஏற்க வேண்டும் என்று குரல் பரவலாக எழுப்பப்படுகிறது. இது பற்றி கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும். இந்த ஆண்டுக்குள் காங்கிரஸ் தலைமைக்கு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர். அதன் பிறகு கட்சியில் அமைப்பு ரீதியில் மாற்றம் செய்யப்படும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close