Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க.வை தொடர்ந்து பா.ம.க அறிவிப்பு!

மிழக சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து வரும் 27ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 27ம் தேதி புதன்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் ஜனவரி 27ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து,  இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல்களில் அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற அ.தி.மு.க.வினர், தலைமை கழகத்தில் 20ம் தேதி (நாளை) முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை உரிய கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close