Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவர் தற்கொலையில் காங்கிரஸ் அரசியல் நடத்துவது கீழ்தரமான செயல்: பா.ஜ.க.

புதுடெல்லி: தலித் மாணவர் தற்கொலையில் காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்துவது மிகவும் கீழ்தரமான செயல். இந்த இழிவான அரசியல் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. கூறி உள்ளது.

இது தாடர்பாக செய்தியாளர்களிடம், பா.ஜ.க.வின் செயலாளர்கள் ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் சிங் ஆகியோர் கூறும்போது, ''மாணவரின் தற்கொலையை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்துவது மிகவும் கீழ்தரமான செயல். தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில்தான் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களில் 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட இடத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அதில் இருந்து அரசியல் ஆதாயம் தேட முயன்றுள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதில் சில ஊடகங்களும் சுயநலத்துடன் தவறான தகவல்களை பரப்புகின்றன. அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறப்படுவதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்" என்றனர்.

இதனிடையே, மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு நெருக்கடி அளித்ததாக கூறப்படுவதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோயல் கூறும்போது, ''முக்கிய நபரான மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல் சம்பவத்தில் விதிப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அவர்கள் முறையான பதில் அனுப்பாததால், குறிப்பிட்ட கால இடைவேளையில் 4 முறை நினைவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டது. இது வழக்கமான நடைமுறைதான். பல்கலைக்கழகத்துக்கு எவ்வித நெருக்கடியும் அளிக்கவில்லை" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ