Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டப்பேரவை: எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளியேறியதற்கான காரணம் இதுதான்?

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.
 

இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசத் தொடங்கினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதையடுத்து, ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக கூறிவிட்டு திமுக, தேமுதிக, காங்கிரஸ், புதிய தமிழகம், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

வெளிநடப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின், செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்னைகளில் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சவுந்திரராஜன் கூறுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றார்.

புதிய தமிழக கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி கூறுகையி்ல், தமிழகத்தில் மத்தியக் குழு முழுமையாக ஆய்வு செய்யவில்லை என்றும், தூத்துக்குடி மாவட்டத்தை அரசு புறக்கணித்ததை கண்டித்தும் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ