Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அதிமுக, திமுக வின் மதுவிலக்கு நாடகங்களை மக்கள் முறியடிப்பார்கள்!'

சென்னை: மது விற்பனை மூலமாகக் கிடைக்கும் பெரிய வருவாயை இழக்க திமுகவோ, அதிமுகவோ விரும்பாது என்றும், அதனால் இந்த இரு கட்சிகளும் ஒரு போதும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தமிழக சட்டப்பேரவையில் இன்று, உறுப்பினர்களின் வினாவிற்கு விடையளித்த தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‘தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது’ என்று கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

மதுவிலக்கு என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றாகும். இதில், மத்திய அரசு எதையும் செய்ய முடியாது. அதேபோல், அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைத்து குடிப்பகங்களும் மூடப்பட்டிருப்பதுடன், 20% மதுக்கடைகளும்  மூடப்பட்டிருக்கின்றன. எனவே, பழைய பல்லவியையே அமைச்சர் திருப்பித் திருப்பி பாடக் கூடாது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.1.90 லட்சம் கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  இதில், அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி போக, மீதமுள்ள ரூ.70,000 கோடி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களுக்கே சென்றுள்ளது. இவ்வளவு பெரிய வருவாயை இழக்க தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ விரும்பாது. எனவே, இந்த இரு கட்சிகளும் ஒரு போதும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது உறுதி" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ