Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதி மீது நடவடிக்கை... அறிக்கையை கிழித்தெறிந்த திமுக... அமளி துமளியான சட்டப்பேரவை!

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்த விசாரணை அறிக்கையை, திமுக உறுப்பினர்கள் கிழித்தெறிந்ததால் பேரவை அமளி துமளியாக காணப்பட்டது.

சட்டப்பேரவையில், வேளாண்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசிய பேச்சு குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, அவையில் அமைச்சர் வைத்திலிங்கம் பேசாததை பேசியதாக கருணாநிதி அறிக்கையில் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கருணாநிதி மீதான நடவடிக்கை குறித்து உரிமை குழு விசாரணை செய்தது.

இந்தநிலையில், கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்த விசாரணை அறிக்கையை,  சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு, அறிக்கையை கிழித்தெறிந்தனர். இதனால், சட்டப்பேரவை அமளி துமளியாக காணப்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்களை குண்டுகட்டாக அவைக் காவலர்கள் வெளியேற்றனர்.
 

இதைத் தொடர்ந்து, கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவையில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் நிராகரித்தார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், அவையில் பேசாததை பேசியதாக கருணாநிதி வெளியிட்டது கண்டித்தக்கது. இதுபோல் இனிமேல் உறுப்பினர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வெளியேற்றத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "முறையாக விளக்க கடிதம் எழுதிய பிறகும் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேள்வி கேட்ட திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது. சட்டமன்றத்தில் அடக்குமுறையை ஏவுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை. மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடர் அதிக நாட்கள் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close