Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயதாரணியை வீழ்த்திய கூடைப் பந்தாட்ட வீராங்கனை!

மிழ் நாடு மகிளா காங்கிரசின் தலைவராக இன்றுமாலை 7 மணிவரை பொறுப்பில் இருந்தவர் விஜயதாரணி எம்,எல்.ஏ. 7 மணிக்குப் பின்னர் அந்த பொறுப்பு எம்.ஜான்சிராணி கைக்கு போயிருக்கிறது. காங்கிரசில் மூன்று தலைமுறை லீடர்களை சந்தித்தவரான மாஜி.எம்.எல்.ஏ., பொன்னம்மாளின் பேத்திதான் புதிய தலைவரான ஜான்சிராணி. அவரிடம் பேசினேன்.

''சிறப்பாக செயல்பட வாழ்த்துகள், இந்த பொறுப்பு கிடைத்ததை எப்படி உணர்கிறீர்கள் ? மகிழ்ச்சியா... ஆச்சரியமா ?'' என்றதுமே உற்சாகம் கொப்பளிக்க பேசுகிறார்.

"இதை ஷாக்கிங் சர்ப்ரைஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.  சோனியா அம்மா, ராகுல்ஜி, ஷோபா உஜா, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!''



''அரசியல் எந்தளவுக்கு அனுபவம் இருக்கிறது?''

''என் பாட்டி பொன்னம்மாள்தான் எனக்கு அரசியலில் ரோல் மாடல்.  அவரைப் பார்த்துப் பார்த்தே நான் என் அரசியல் பயணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.  அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும்  பழகியவர், அனைவருக்கும் பிடித்தமானவர். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அவரைப் பற்றி... அவர் விட்ட இடத்தை கண்டிப்பாக நான் பிடிப்பேன்!''

''என்ன படித்திருக்கிறீர்கள்? குடும்பம் பற்றி சொல்லுங்கள்!''

''கணவர் முத்துக் கிருஷ்ணன் ஐ.டி. ஃபீல்டில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள், பள்ளிப் படிப்பில் இருக்கிறார்கள். நான் பி.ஏ. பட்டதாரி. என் குடும்பம், கணவர் என்று அனைவருமே காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்டவர்கள்தான், அதனால், குடும்ப ஆதரவு முழுமையாக இருக்கிறது.

''தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரசாரங்கள் முன்னைக் காட்டிலும் பலமாக இருக்க வேண்டிய சவாலான தருணமாயிற்றே இது!''

"நிச்சயமாக... தலைமையின் வழிகாட்டுதலில்  எதையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறேன். என்னை நம்பிக் கொடுக்கப் பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறேன், அதன்படி செயல்படுவேன். நான் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் தீவிர விளையாட்டுப் பிரியை. கூடைப் பந்து வீராங்கனையும் கூட. அந்த வேகம் இப்போதும் எனக்குள் இருக்கிறது! சார், பார்த்துக்கிட்டே இருங்க, ஜெயிப்போம்ல!''
அசத்தலாகச் சிரிக்கிறார், ஜான்சிராணி.

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ