Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த் திருப்பதிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் சென்றால் என்ன அர்த்தம் தெரியுமா? - JV Breaks வீடியோ

விஜயகாந்த் தே.மு.தி.கவை தொடங்கி முதல்முறையாக களத்தில் குதித்தது 2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில். அத்தேர்தலில் யாருமே, ஏன் விஜயகாந்தே எதிர்பாராத வண்ணம் 8.38 சதவிகிதம் வாக்குகளைக் குவித்தது தே.மு.தி.க. அப்போது முதல் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் தே.மு.தி.க. எந்த அணியில் இடம் பெறும் என்பது பெரும் விவாதப் பொருளாகிவிட்டது. அது போலவே இப்போதும் ஹேஷ்யங்களும் விவாதங்களும் கொடி கட்டிப் பறக்கிறது..!

அ.தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தி... தி.மு.க. மீதான நம்பிக்கையின்மை என பிரதான கட்சிகள் பிரகாசமாக இல்லாத சூழலில்,  தே.மு.தி.க. இடம் பெறும் அணிக்கு தேர்தலில் சாதக அலை வீசும் என்பது அரசியல் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், சாமான்ய வாக்காளனின் கணிப்பாகவும் இருக்கிறது.

இந்நிலையில் எதைச் செய்தாவது தே.மு.தி.கவை தன் பக்கம் இழுக்க வேண்டுமென்பது தி.மு.கவின் நிலைப்பாடாக இருக்க, எதைச் செய்தாவது தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள  வேண்டுமென்பது அ.தி.மு.கவின் செயல்திட்டமாக இருக்கிறது.

விஜயகாந்தோ தன் மனதில் இருப்பதைப் பற்றி எந்த சிக்னலும் அளிக்காமல் இருக்கிறார். ஆனாலும், அவர் மனதில் என்ன இருக்கிறது, விஜயகாந்தின் பலம் என்ன, தே.மு.தி.கவின் பலவீனம் என்ன, விஜயகாந்த் கூட்டணி அமைப்பதில் திருப்பதிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் இருக்கும் தொடர்பு என்ன, அவர் எந்தக் கூட்டணிக்குச் செல்வார், அதை எப்போது அறிவிப்பார் என்றெல்லாம் பல தகவல்களை JV Breaks வீடியோ மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ப.திருமாவேலன்.

இது இந்த வார நிலவரமே. அடுத்த வாரம் என்ன நடக்குமென்ற அப்டேட்களுக்கு JV Breaks வீடியோக்களை பின் தொடருங்கள்..!


- ஜு.வி டீம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ