Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதகம்... பாதகம்... கருத்து கணிப்பை விமர்சிக்கும் ஸ்டாலின்!

திமுகவைப் பற்றி சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்துவதில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற தொழிலதிபர் வி.கே.என். இல்லத் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் முன்னிலையில் நடத்தி வைத்தவர். திருமண விழாவில் பேசிய ஸ்டாலின்,  நாட்டுக்கு நல்ல நேரம் மிகவிரைவில் வரப்போகிறது. நான் மட்டுமல்ல நாடே அந்த நல்ல நேரத்தில் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் நமக்கு நாமே பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். எனது பயணத் திட்டத்தில் மீதமுள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளை வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் முடித்துவிடுவேன். கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் பல்வேறு தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இவைகளைக் களைய, தமிழகத்தைக் காப்பாற்ற வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், நீங்கள் வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை பராமரிக்காமல் சிதிலப்படுத்தியது, பாவேந்தேர் பாரதிதாசன் ஆய்வக நூலகத்தை முடக்கியது, மதுரையில் தமிழ்த்தாய் சிலையை அமைக்காதது, தொல்காப்பியர் பூங்காவை கிடப்பில் போட்டது உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து, தமிழ் வளர்ச்சிக்கு எதிராக ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவுக்கு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க செலுத்த அருகதை இல்லை.

கருத்து கணிப்புகள் திமுகவைப் பற்றி சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் கருத்துக்கணிப்புகளை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. எங்களது பணியை தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறோம். திமுகவின் அழைப்பை ஏற்று தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் நாங்களே வெளிப்படையாகக் சொல்வோம்" என்றார்.

தொடர்ந்து, திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகில் துவங்கிய பிரமாண்டமான பேரணியில் திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக வந்தவர், திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி, விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவிடங்களில் ஸ்டாலின் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து திருச்சி மணப்பாறையில் நடந்த வீரவணக்க நாள் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.

-சி.ஆனந்தகுமார்

படங்கள்:
தே.தீட்ஷித்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close