Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு பத்மவிபூஷண்... அரசியல் உள்நோக்கம் இல்லை என்கிறார் தமிழிசை!

கோவை: நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பிரதமர் மோடி வருகின்ற 2–ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் கலந்து கொள்ளும் கூட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமையும். பிரதமர் கோவைக்கு வருகை தர இருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாகவும், தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் கூட்டமாகவும், புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிடும் கூட்டமாகவும் இந்த கூட்டம் அமையும்.

மேலும், நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு ரஜினிகாந்த் முன்னோடியாக திகழ்ந்ததற்காக ஏற்கனவே பத்மபூஷண் விருது பெற்றார். அதனால், இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க கூடாது.

கடந்த 2011–ம் ஆண்டு பா.ஜ.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்ததோ அந்த கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பலமான கூட்டணியாகவும், தமிழக மக்களுக்கு பலன் தரக்கூடிய கூட்டணியாகவும் எங்கள் கூட்டணி அமையும். பா.ஜ.க.வுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close