Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாரியம்மன் கட்டளைக்கு கீழ்படிவாரா அம்மா...?- ஆதி தமிழனின் குரல்

'அம்மாவின் ஆணைக்கு கீழ்படிவாரா அம்மா?' என்ற அர்த்தத்துடன் சேலம் மக்கள் குழுவால் இணையத்தில் பகிரப்பட்ட போஸ்டர், அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. 
 
 
சேலம் பகுதியில் இயங்கும் 'சேலம் மக்கள் குழு' என்ற அமைப்பு, அப்பகுதியில் நீர்நிலைகளை செப்பனிடுதல், புனரமைத்தல் ஆகிய பணிகளை அரசின் உதவி இல்லாமல், மக்கள் பங்களிப்புடன் கடந்த எட்டு வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.  அந்த அமைப்பு, தமிழகமெங்கும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற கோஷத்துடன், சேலம் பகுதியில் மூன்று சக்கர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதற்காக இணையத்தில் பகிரப்பட்ட ஒரு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அந்த போஸ்டரில் உள்ள விஷயம் இது தான்,  ‘மண்ணுலகின் உயிர் வளர்க்கும் மாண்புடைய மாரி அம்மாவின் உத்தரவு - தமிழக அரசே நான் வாழும் நீர் நிலைகள் மற்றும் நான் ஓடி வரும் வழித்தடங்கள் அனைத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்று’ - சேலம் மக்கள் குழு.
 
இது குறித்து சேலம் மக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷுடன் பேசியபோது, “ஆதி தமிழர்கள் இயற்கை வழிப்பாட்டை மேற்கொண்டனர். நீரை மாரியாக வணங்கினர். நீர் நிலைகளான ஏரி, குளம், ஆறு ஆகிய பகுதிகளே உண்மையான மாரி  கோயில்கள் என்பதை உணர்ந்து ஆயிரக்கணக்கான நீர்நிலைகளை உண்டாக்கினர்.  ஆனால், துரதிஷ்டமாக நாம் நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, கோயில்களில் மாரி அம்மாவை வணங்குகிறோம். மாரிக்கான உண்மையான அர்ப்பணிப்பு என்பது நீர்நிலைகளை புனரமைப்பதே. நாம் இதை மறந்ததால்தான் கடந்த டிசம்பர் மாதம் மாரி அம்மா, கோபம் கொண்டு வெள்ளமாக மாறி, நம்மை துயரப்படுத்தினாள். நாம் இந்த துயரத்திலிருந்தும் பாடம் கற்கவில்லை என்றால், இனி வரும் காலங்களில் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.
 
 
சென்னை கடலூரில் வெள்ளம் வந்த போது, தமிழக அரசு நீர் நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்பது உட்பட பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எந்த உருப்படியான நடவடிக்கையும் இது நாள் வரை அகற்றப்படவில்லை. தமிழகமெங்கும் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மூன்று சக்கர வாகனப் பயணத்தை சேலம் - சென்னை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.
 
ஜனவரி 29- ம் தேதி  துவங்கும் இந்த பிரசார பயணத்தை திரைப்பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் துவங்கி வைக்கிறார்.
 

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ