Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேற்குவங்க வளர்ச்சியை இடதுசாரிகளால் ஏற்க முடியவில்லை: மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை இடதுசாரிகளால் ஏற்க முடியவில்லை. இடதுசாரிகளின் ஆட்சிக் காலத்தைவிட தற்போது மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மேற்கு வங்க அரசின் ஆட்சிக் காலத்தில், மாநிலத்தில் எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்ததது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ''மாவோயிஸ்டுகளின் ஆதிக்கப் பகுதியாக ஒரு காலத்தில் ஜங்கில் மஹால் (மேற்கு மிதுனபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்கள் அடங்கியது) இருந்தது. ஓராண்டில் மட்டும் அங்கு 500 பேர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது அங்கு அமைதி நிலவுகிறது.

அதேபோல், வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற டார்ஜிலிங் பகுதியிலும் தற்போது சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது மாநிலம் எப்படி இருந்தது? தற்போது எப்படி உள்ளது? என்பதை நீங்களே (மக்கள்) ஒப்பிட்டுப் பாருங்கள்.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை அவர்களால் (மார்க்சிஸ்ட்) ஏற்க முடியவில்லை. தொழில் முதலீட்டுக்கு உகந்த இடம் மேற்கு வங்கம் என்று பல்வேறு முதலீட்டாளர்கள் பாராட்டியுள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தொழில் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றன. இவற்றையெல்லாம் வளர்ச்சி என்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ