Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2016 சட்டமன்ற தேர்தல்: தேமுதிகவில் பிப்.5 முதல் விருப்ப மனு!

2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்கள் விருப்பமனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் 5.02.2016 வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14.2.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 2,500-ம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் கழகத் தொண்டர்கள் அனைவரும் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்ளவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ