Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளைஞர் சமுதாயம் தற்கொலை செய்து கொள்வது சரியான போக்கல்ல: இல.கணேசன்

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன்  தி.நகரில் உள்ள பா.ஜ.க மாநில அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதே போல், அந்நாட்டு பிரதமர்களும் நம் நாட்டிற்கு வருகை தருகிறார்கள். அனைத்து சந்திப்புகளின் போதும், ஒரு விஷயம் மட்டும் அனைத்து தரப்பிலும் பொதுவான கருத்தாக இடம் பெறுகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதுதான் அது.

நரேந்திர மோடியை எதிர்ப்பதாகச் சொல்லி நாட்டிற்கு கேடு விளைவிக்கிறார்கள். இந்தப் போக்கு நல்லதல்ல. நமக்குள்ளே ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதைப் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், பயங்கரவாதத்தை ஒழிக்க எல்லாக் கட்சிகளும் அரசியல் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். லஞ்சமில்லாத நாடுகளின் பட்டியலில் இதற்கு முன் இருந்ததை விட ஏழெட்டுப் படி நாம் மேலே சென்றுள்ளோம். இது வெறும் தொடக்கம்தான். இன்னும் உறுதியாக அரசாங்கம் சில ஆண்டுகள் இதே நிலையில் நீடிக்கும் பொழுது, இதை நாம் மென்மேலும் பல்வேறு வகுப்புகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இந்த வாக்குறுதியை நான் மத்திய அரசாங்கத்திற்கு மட்டும்தான் தர முடியும். மாநில அரசாங்கத்தில் இந்நிலை வர வேண்டுமானால், ஒரு மாற்றும் வர வேண்டும்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலே முறைகேடு நடந்திருகிறது என்று தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி கூறுகிறார். தேர்தல் நடைமுறைகள் அவருக்கு எந்த அளவுக்கு தெரியுமோ, அதே அளவிற்கு தேர்தலில் எந்த மாறி தவறுகள் எல்லாம் நிகழும் என்பதையும் அவர் அறிந்தே இருப்பார். வாக்காளப் பட்டியலில் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது என்று அதன் புள்ளி விவரத்தை மாற்றச் சொன்னால் அது போதாது. எந்த இடத்தில் தவறு நடந்திருகிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்! 

ஒரு ஆளுங்கட்சியைச் சார்ந்தவரின் வீட்டில் 4 பேர் உள்ளார்கள் என்றால், அவர்கள் அனுமதி பெற்று, அவர்களுக்குப் பின்னால் ஒரு 3 பேரை வாக்காளர்களாக சேர்ப்பது. அவர் பக்கத்து மாவட்டக் காரராக இருப்பார். அவருக்கு வாக்காள அடையாள அட்டை என எல்லாமே இருக்கும். ஒரே மாதிரியான புகைப் படம், பெயர்கள் இருக்குமானால், அதை மாநில அரசோ, மத்திய அரசோ, கணினி மூலமாகக் கண்டறிய வேண்டும்.

விழுப்புரம் கல்லூரி மாணவிகள் தற்கொலை குறித்து அவர் கருத்தைக் கேட்டபோது, " இளைஞர் சமுதாயம் தற்கொலை செய்து கொள்வது சரியான போக்கல்ல என்பதை அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சமுதாயத் தலைவர்கள் பெற்றோர்கள் என எல்லோருமே நம் இளைய சமுதாயத்திற்கு வலியுறுத்த வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய துணிவு ஏற்கப்படுகிறதோ, அப்போது துணிச்சலாக எது நடந்தாலும் பரவாயில்லை என்ற உண்மையை பகிரங்கமாகச் சொல்லும் துணிவும் ஏற்கப்பட வேண்டும்" என்றவர், சந்திப்பு முடிகையில், பிரதமர் மோடி பிப்ரவரி 2-ம் தேதி, கோவை வர உள்ளதாகவும், அவர் வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்க, அதற்கு முன்பாக கூட்டணி உறுதி செய்வதற்கு வாய்ப்பில்லை! என்றும் கூறினார்.

-மு.சித்தார்த்
படங்கள் : மா.பி.சித்தார்த்

(மாணவப் பத்திரிகையாளர்கள்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close