Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்.வி.எஸ்.கல்லூரி அனுமதி ஊழல்: வரும் 4-ஆம் தேதி பாமக போராட்டம்!

சென்னை: எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி வழங்கி ஊழல் நடைபெற்றதைக் கண்டித்து தமிழக மாணவர் சங்கம் சார்பில் வரும் பிப்- 4 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரத்தை அவர்களுக்கும் கல்லூரிக்கும் இடையிலான மோதலாக திசைத் திருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த மாணவிகளின் சோக முடிவுக்கு உண்மையான காரணம் யார்? என்பதை மூடி மறைக்கவே இந்த சதி நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி கல்லூரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் அப்போதைய தி.மு.க. அரசால் தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கு தேவையான கட்டமைப்பு வசதி முழுமையாக இருப்பதை உறுதி செய்து, அதன்பிறகு தான் அக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

ஆனால், கட்டமைப்பு வசதிகளே இல்லாத கல்லூரிக்கு, மிகப்பெரிய தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசாவது கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிய அதிமுக அரசு, இதுதொடர்பாக மாணவர்கள் அனுப்பிய புகார்களை கண்டுகொள்ளவில்லை.

மாணவிகள் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆணையிடுவதன் மூலம் அ.தி.மு.க.வும்,  மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என உருக்கமாக கூறுவதன் மூலம் தி.மு.க.வும் இந்த கொலைப்பழியிலிருந்து தப்பிக்க முயல்கின்றன.

இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கு அனுமதி அளிப்பதிலும், அதற்கு வழங்கப்பட்ட இணைப்பு நிலையை புதுப்பிப்பதிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மத்திய புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கம் சார்பில் வரும் 04.02.2016  வியாழக்கிழமை அன்று சென்னையில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறும்.

இப்போராட்டத்திற்கு  முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளருமான ஏ.கே. மூர்த்தி தலைமையேற்பார். மாணவ அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்பர்." என்று தெரிவித்துள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close