Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்:கருணாநிதி கோரிக்கை!

சென்னை: தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் மத்திய அரசை திமுக தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

" சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை 3-வது பாதை திட்ட  பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம் - திருவாரூர் ரயில் பாதை திட்டம், திருப்பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை திட்டம் மற்றும் அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி செல்லும் ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் 1996 மற்றும் 1998ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால்,இந்த  ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வுகள் நிறைவடைந்த நிலையில், இத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு நியாயமானதல்ல"  என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை முடுக்கி விட்டு மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ