Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூர் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து நீக்கமா?

சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம்.

கடந்த 2011- ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றவர் செந்தில் பாலாஜி. யாரும் அசைக்க முடியாத வகையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார். ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாகவும் செந்தில் பாலாஜி இருந்து வந்தார்.



மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜி பெரிய யாகமே நடத்தினார். கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து அமர்க்களப்படுத்தியதோடு, அம்மன் கோயிலில் காவடியும் எடுத்தார். ஓபிஎஸ்-க்கு பின் செந்தில் பாலாஜிதான் என்று ஒருகட்டத்தில் அதிமுகவினர் பேசும் வகையில் உச்சத்திற்கு சென்றார் பாலாஜி.

ஆனால், கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதியன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். மேலும் அவர் வகித்து வந்த கரூர்  மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்த நிலையில், தற்போது அவர் மேல் எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. எனவே கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கப்படலாம் என்று தெரிகிறது
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close