Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டுறேன்! - ஜே.கே.ரித்தீஷ்

தி.மு.க-வில் இருந்தபோது ஆல்டைம் அட்ராசிட்டி பார்ட்டியாக இருந்த ஜே.கே.ரித்தீஷ், அ.தி.மு.க-வில் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

'எப்படி இருக்கீங்க?' என்ற விசாரிப்போடு, 'நமக்கு நாமே', 'முடியட்டும் விடியட்டும்', 'நான் விரும்பும் சென்னை', 'மாற்றம் முன்னேற்றம்' என பல்வேறு கட்சிகள் தேர்தலுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கேப்ஷன்களையே கேள்விகளாக வைத்து, பதில் கேட்டோம்.

'இனி எப்பவும் அம்மாதாண்ணே. அதனால, தைரியமா பேசலாம்!' என்று உற்சாகமாக அமர்ந்தார்.

முடியட்டும் விடியட்டும் (திமுக)

ஸ்டாலின் எதிர்பார்க்குறது, தனக்கு விடியணும்னு! ஏன்னா, அவர் எந்தக் காலத்திலேயும் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிற ஆள் கிடையாது. திமுக-வை எப்படிக் கைப்பற்றலாம்? கட்சியோட சொத்தை எப்படி தன்னோட கைக்குள்ள போட்டுக்கலாம்னு பிளான் பண்றவர். இதை மனசுல வெச்சுதான், அவருக்கு அவரே 'முடியட்டும் விடியட்டும்'னு சொல்லிக்கிறார்.

 



நமக்கு நாமே (திமுக)

அரசியல்வாதியா இருந்துக்கிட்டு 'நமக்கு நாமே'னு சொல்லிக்கிட்டா, மக்களுக்குத் தெரியாதா? நாடாளுமன்றத் தேர்தல்ல ஒரு சீட்டும் கிடைக்கலை. வர்ற சட்டமன்றத் தேர்தல்லேயும் அதுதான் நடக்கப்போகுது. அதைத் தடுத்து ஒன்றிரண்டு இடத்துலயாவது ஜெயிக்கணும்னு திமுக தொண்டர்களிடம் 'நமக்கு நாமே' ஓட்டு போட்டுக்குவோம்னு பிரச்சாரம் பண்றார். வார்த்தைகளைப் பார்த்தாலே தெரியலை. இது ஒரு சுயநலக் கருத்து. திரும்பவும் சொல்றேன். அவருடைய முழு நோக்கமும் திமுக-வைக் கைப்பற்றுவதுதான்.

அதனாலதான், அழகிரியையும் கட்சிக்குள்ள வரவிடாம தடுக்குறார். அவருடைய ஆதரவாளர்களைத் தவிர, கட்சிக்குள்ள யாரும் வந்துடக்கூடாது. வளர்ந்துடக்கூடாதுனு அவரோட எண்ணம். அவரோட செயல்பாடுகள் எல்லாமே திமுக-வின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறதுனால, திமுக வர்ற தேர்தல்ல எங்கேயும் ஜெயிக்காது. இதுக்கு அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராக சந்தோஷப்படுறேன். ஸ்டாலினோட இந்த செயல்பாடுகளைப் பராட்டுறேன்!

திருப்புமுனை மநாடு (தேமுதிக)

'திருப்புமுனை'ங்கிற வார்த்தையை 'அம்மா'வைத் தவிர யாரும் பயன்படுத்த முடியாது. ஏன்னா, ஒவ்வொரு முறையும் மக்கள் விரும்புற திருப்புமுனையை அவங்கதான் கொடுக்குறாங்க. இனியும், மக்களுக்கு நல்லது நடக்கணும்னா அம்மாதான் ஜெயிக்கணும், ஜெயிப்பாங்க. மத்தபடி, விஜயகாந்த் தனக்கு ஏதாவது திருப்புமுனை ஏற்பட்டு, சில தொகுதிகளைக் கைப்பற்றிட மாட்டோமா?னு தவிச்சுக்கிட்டு இருக்காரு. அவர் நடத்துற 'திருப்புமுனை' மாநாடு மக்களுக்கு நல்லது பண்ணனும்னு இல்லை. நல்ல கூட்டணி அமைஞ்சு, அதன்மூலமா தன்னோட கட்சிக்கு திருப்பு முனை ஏற்படணும்னுதான்! மிஸ்டர். விஜயகாந்த்... மக்கள் தெளிவா இருக்காங்க.

மாற்றம் முன்னேற்றம் (பாமக)

இந்த வார்த்தைக்கு ஒரிஜினல் சொந்தக்காரர் ஒபாமா! அமெரிக்காவுல அவர் அடிச்ச போஸ்டரைக் காப்பி, பேஸ்ட் பண்ணி ஒட்டிக்கிட்டு இருக்கார். ஒரு போஸ்டரையே சுயமா உருவாக்காதவர், எப்படி தகுதியான தலைவரா இருக்கமுடியும்? அதையும் மீறி, மாற்றமும் முன்னேற்றமும் நடந்தா அவருக்குச் சந்தோஷம். மக்களுக்கு அல்ல!

நாம் விரும்பும் சென்னை (பாமக)

'அம்மா' ஆட்சியில சென்னை மக்கள் அவங்க விரும்புற மாதிரிதான் இருக்காங்க. மேலும் மேலும் விரும்பணும்னுதான் 'அம்மா' ஆசைப்படுறாங்க! 'நான் விரும்பும் சென்னை'னு மக்கள்கிட்ட அன்புமணி கேட்டுக்கிட்டு இருக்கிறதால, ஒரு சென்னைவாசியா  'நான் விரும்பும் சென்னையில், எல்லா தொகுதி மக்களும் 'இரட்டை இலை'க்கு ஓட்டு போட்டு, 'அம்மா'வின் அன்பைப் பெறுவாங்க. அதை நீங்க பார்ப்பீங்க!'னு அன்புமணிக்குச் சொல்லிக்கிறேன்.

மலரட்டும், நிமிரட்டும் (பாஜக)

ஆசைப்படுறாங்க. அவங்க முயற்சி மலரட்டும், நிமிரட்டும்.

தொடரட்டும் நல்லாட்சி, பொங்கட்டும் மகிழ்ச்சி (அதிமுக)

கடைசியா நம்ம கட்சிக்கு வர்றீங்க. பரவாயில்லை... மத்தவங்களோட கேப்ஷனையும், நம்ம கட்சியோட கேப்ஷனையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்க. என்னைக்குமே 'அம்மா'வின் சிந்தனை நல்லாதா இருக்கணும். நல்லதே நடக்கணும்னுதான் இருக்கும். 'நமக்கு நாமே', 'முடியட்டும் விடியட்டும்'னு நெகட்டிவா இல்லாம, 'தொடரட்டும் நல்லாட்சி, பொங்கட்டும் மகிழ்ச்சி'னு எனர்ஜியான கேப்ஷனை வெச்சிருக்கோம். நடக்கப் போறதும் அதுதான்!

- கே.ஜி.மணிகண்டன்
படங்கள் : பா.காளிமுத்து

எடிட்டர் சாய்ஸ்