Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சியாச்சின் பனிச்சரிவில் இறந்த தமிழக வீரர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்!'

சென்னை: இமயமலையில் உள்ள சியாச்சினில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த 4 தமிழக வீரர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,    

" சியாச்சின் பனிவயலில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; அவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து  பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையைச் சேர்ந்த ஏழுமலை, தேனி மாவட்டம் குமணன் தொழுவைச் சேர்ந்த குமார், மதுரை மாவட்டம் சொக்கத்தேவன்பட்டியை கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோர்தான் இந்த விபத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்கள் ஆவர். பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த 4 பேரும் இளைஞர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்கள் மிகவும் ஆபத்தான சியாச்சின் பனிப்புயல் பகுதியில் துணிச்சலுடன்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

நாட்டிற்காக உயிர்நீத்த இவர்களது குடும்பங்கள் இப்போது சோகத்திற்கு மட்டுமின்றி, நிச்சயமற்ற எதிர்காலத்திற்கும் ஆளாகியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, வழக்கமாக வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிதி உதவியை இரட்டிப்பாக்கி வழங்குவதுடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நான்கு வீரர்களுக்கும் பொதுவான இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close