Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊழல் விவகாரத்தில் துளியும் சமரசம் செய்யாது காங்கிரஸ் - ராகுல்

திருவனந்தபுரம்: ஊழல் விவகாரத்தில் துளியும் சமரசம் செய்யாது காங்கிரஸ் கட்சி என்று திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி கூறினார்.

கேரள மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக,  கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் தலைமையில்,  காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேரணி நடைபெற்றது.

அந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ''இந்து-முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தியும், நாட்டின் பலதரப்பட்ட மக்களிடையே வெறுப்புணர்வை வளர்த்தும் பிரதமர் பதவியை மோடி அடைந்துள்ளார்.

தற்போதைய மத்திய அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலின்போது ஏழை, எளிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி விவசாயிகளுடனோ, தொழிலாளர்களுடனோ இருப்பதை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

தொழில் அதிபர்களை  ஊக்கப்படுத்துவதில் காட்டும் அக்கறையை ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு  வெளிப்படுத்த வேண்டும். கேரளத்தில் தற்போதுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர், காலாவதியாகிவிட்ட கொள்கைகளை உடையவர்கள். அவர்கள் கூறுவதைப் பின்பற்றினால் மாநிலம் ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கிச் சென்றுவிடும்.

கேரளத்தில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு,  அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி துளியும் சமரசம் செய்துகொள்ளாது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ