Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உங்களால் முடியாவிட்டால் யாரால் முடியும்...?' - ஒரே மேடையில் 14 திருமணங்களை நடத்தி வைத்து ஜெ. சூளுரை!

"சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கழகக் கண்மணிகள் களப்பணியாற்றிட வேண்டும். உங்களால் முடியாவிட்டால், யாரால் முடியும்?" என்று  சென்னையில் ஒரே மேடையில் 14 அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து,  முதலமைச்சர் ஜெயலலிதா சூளுரைத்தார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

மணமக்களை வாழ்த்தி ஜெயலலிதா பேசுகையில், "திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கழக உறுப்பினர்களை ஒரே இடத்தில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அடுத்தவர் மகிழ்ச்சியில் தங்கள் மகிழ்ச்சி என வாழ்வதே இல்லறம்.

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கழகக் கண்மணிகள் களப்பணியாற்றிட வேண்டும். உங்களால் முடியாவிட்டால், யாரால் முடியும். நிச்சயம் இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தமிழ்நாட்டின் நலன் மீது, மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியலே பாடம் கற்பிக்கும். அஇஅதிமுக மீது வசைபாடுவதே அவர்கள் நோக்கம். அதிமுகவின் வளர்ச்சி பொறுக்காமல் எதிர்க்கட்சிகள் வசைபாடுகின்றன " என்று பேசினார்.

படங்கள்: தே.அசோக்குமார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close