Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரிவேந்தரும் பா.ஜ. கூட்டணியை உதறினார்... தனித்துப்போட்டி என அறிவிப்பு!

அரியலூர்: வரும் 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி,  மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.


அரியலூர்  கீழப்பழூரில்,  ஐ.ஜே.கே. சார்பிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாரிவேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடும். இதில் 50% பெண்கள். அதாவது 117  பெண் வேட்பாளர்கள் களம்  இறங்குவர்' என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐ.ஜே.கே. அங்கம் வகிக்கிறது என்று செய்திகள் வெளிவந்த நிலையில்,   பாரிவேந்தர் தனித்துப் போட்டி என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

எடிட்டர் சாய்ஸ்