Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ. பிறந்த நாளுக்காக மிரட்டப்படும் தனியார் மருத்துவமனைகள்:ராமதாஸ் குற்றச்சாட்டு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவுக்காக இலவச மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பில் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் 680 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுத் தரப்பில் நெருக்கடி அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவுக்கு புகழ் சேர வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக குறைந்தது 2 முதல் 3 மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தித் தர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையிட்டிருக்கிறார். மருத்துவ முகாம்களை நடத்த முன்வராத மருத்துவமனைகள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவதுடன், இதுவரை அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வகை அத்துமீறல்களுக்கும் அடிப்படை காரணம் என்னவெனில், 5 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை மக்கள் நம்மிடம் கொடுத்துவிட்டார்கள்... இந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் தொடங்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது வரை எதை செய்தாலும் யாரும் நம்மை கேட்க முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனதில் எழுந்துள்ள ஆணவம் தான். அந்த ஆணவத்தை அடுத்த சில வாரங்களில் சுக்குநூறாக மக்கள் நொறுக்கப்போவது உறுதி." என்று கூறியிருக்கிறார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ