Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு!

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று திடீரென சந்தித்து பேசினார்.

தமிழிசை செளந்தரராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் வரும் 17ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நடக்கவுள்ளது.
 

திருமண விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த திருமண விழாவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழிசை நேரில் அழைப்பு விடுத்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தமிழிசை செளந்தரராஜன் இன்று குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென கேட்டுக் கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.

எடிட்டர் சாய்ஸ்