Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடா.. ராயபுரம் காங்கிரஸூக்கா..!? - குபீர் போஸ்டர்

’ராயபுரம் தொகுதி காங்கிரஸுக்குத்தான்...வேட்பாளரும் நான்தான்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல, அத்தொகுதி முழுக்க ராயபுரம் மனோ கையெடுத்துக் கும்பிடும் போஸ்டர்கள் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது போக, மேக்ஸி-கேப் வேன் மூலமாக ஏரியாவில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் லோக்கல் தி.மு.க.வினர் குழப்பம் ப்ளஸ் எரிச்சலில் உள்ளனர்.

தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட ராயபுரம் தொகுதியில் முதன்முறையாக தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு கடந்த 2011-ல்தான் விட்டுக் கொடுத்தது. காங்கிரஸ் சார்பில் ராயபுரம் மனோ நின்றார். வென்றது, அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார். இதற்கு முன்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினரை ராயபுரம் மனோவின் ஆட்கள் 'கதற' விட்டதை உ.பி.க்கள் மறக்கவில்லை. அதன் தொடர்ச்சியே டி.ஜெயக்குமாருடன் நடந்த போட்டியில் காங்கிரஸ் தோற்றது என்றும் கூறப்படுகிறது. 

மனோ தரப்பு காங்கிரஸ் ஆட்களிடம் பேசியதில்: "த.மா.கா. தலைவர் வாசனின் தளபதியாக இருந்தவர் எங்கள் அண்ணன் ராயபுரம் மனோ. ஆனால் காங்கிரசை வாசன் மீண்டும் உடைத்த போது அண்ணன் (மனோ) அவருடன் போகாமல் காங்கிரசிலேயே இருந்து விட்டார். ராயபுரத்தைப் பொறுத்தவரையில் மனோதான் ராயபுரம்... இதை மாற்ற முடியாது. கூட்டணியில் எல்லாம் பேசி ராயபுரத்தை நாங்கள் வாங்கி (?) விட்டோம்" என்கின்றனர்.

தி.மு.க. தரப்பில் இரண்டுவித மனநிலையுடன் தொகுதி உ.பி.க்கள் காணப்படுகின்றனர்.

மனநிலை (1)

" காங்கிரசுடன் எல்லாம் பேசி முடிச்சி விட்டிருக்காங்க நண்பா... இல்லேன்னா, ராயபுரம் மனோ இவ்வளவு நம்பிக்கையா போஸ்டர் போட்டும், வேன் பிரச்சாரம் தொடங்கியும் 'சீன்' போடணும்னு அவசியமில்லே. வேற என்ன வழி இருக்கு ? தலைமையும், தளபதியும் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும். போன முறை ஏமாந்தது போல இந்த முறை ஏமாற மாட்டோம். கூட்டணி வேட்பாளரை ஜெயிக்க வைத்துக் காட்டுவோம்" என்கின்றனர் சோகமாக.

மனநிலை(2)

"என்னப்பா  இப்படி காமெடி பண்றாங்க...ஒருமுறை இந்தத் தொகுதியை கூட்டணிக்கு விட்டுக் கொடுத்ததே ரொம்ப தவறானது. இந்த முறை அப்படி நடக்காது, நாங்க விடவும் மாட்டோம். மனோவுக்குத்தான் வேற வேலையில்லை, ஏதேதோ பண்றாரு.

இன்னும் கூட்டணியே முடிவாகலை. இன்னும் குலாம்நபி ஆசாத் வரணும், பேசணும், அப்புறம் தொகுதிப் பங்கீடுன்னு ஒண்ணு இருக்கு. அதில் ராயபுரம் போகுதா இல்லையான்னு இதுக்குப் பிறகுதான் முடிவாகும். ஆனா அதுக்குள்ளே இந்த பேனர், போஸ்டர்னு வைத்து கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தற வேலையை செய்வது நல்லதுக்கு இல்லை" என்கின்றனர் குழப்பமே இல்லாமல்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!

- ந.பா.சேதுராமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ