Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரா? காத்திருக்கும் ஸ்டாலின்

"தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஏற்கனவே கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பை ஏற்று நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை,  அவரது கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏ எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "திமுகவுடன் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உறுதி அளித்துள்ளார். பேச்சுவார்த்தையின்போது தொகுதி பங்கீடு உடன்பாடு குறித்து பேசப்படவில்லை" என்றார்.

திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், "தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஏற்கனவே கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பை ஏற்று நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மேலும், பாஜக உடனான கூட்டணி பற்றி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தது அவரது கருத்து என்றார் ஸ்டாலின்.

-எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close