Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிகவை காங்கிரஸ்தான் அழைத்து வர வேண்டும் - திமுக தடாலடி

கூட்டணி வலுவாக இருக்க தேமுதிகவை காங்கிரஸ் கட்சி அழைத்து வர வேண்டும் என்று திமுக தலைவர்  தடாலடியாக கூறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக,  திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில்,  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
 

இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏ எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டணி வலுவாக இருக்க தேமுதிகவை காங்கிரஸ் கட்சி அழைத்து வர வேண்டும். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகள் சேர தடையில்லை.

ஈழப்பிரச்னையில் தற்போதுள்ள மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஈழப்பிரச்னையை திமுக கைவிடவில்லை. மத்திய அரசை தொடர்ந்து எதிர்ப்போம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்