Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இவர்கள் நம்பிக்கையான பங்காளிகளாம்'

"நாங்கள் நம்பிக்கையான பங்காளிகள்"-என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் திமுகவோடு மீண்டும் கூட்டணி சேர்ந்த போது, சென்னையில் கூறியுள்ளார்.

WE ARE MOST DEPENDABLE PARTNERS"-என்கிற ஆசாத்தின் வார்த்தையில் எவ்வளவு உண்மையுள்ளது?

2-ஜி அலைகற்றை வழக்கில் கடந்த வெள்ளிகிழமையன்று, தன் தரப்பு வாதத்தில் முன் வைத்த ஆ.ராசா அவர்கள், தான் செய்த விஷயங்கள் அனைத்தும், முன்னாள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும், இன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் தெரியும் எனச்சொல்லி அவர்களை சாட்சிகளாக அழைக்க வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரசின் மானத்தை "நடுகோர்ட்டுக்கு மட்டுமல்ல நடுரோட்டுக்கும்" கொண்டுவந்த திமுக "நம்பகத்தன்மை கொண்ட பங்காளியாம்"

2011ம் ஆண்டு திமுக -காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தைகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் இதே 2-ஜி மற்றும் ஏர்செல்-மேக்சி வழக்கு விஷயமாக அதே கட்டடத்திற்குள் இருந்த கலைஞர் டி.வி. நிறுவனம் சி.பி.ஐ.யால் சோதனை செய்யப்பட்டது.

‘நம்பிக்கைக்குரிய பங்காளிகள்” எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.

2004 ஐ.மு.கூ. அரசில் முக்கிய இலாகாகள் வேண்டும் என்பதற்காக, அரசுக்கு தரவேண்டிய ஆதரவு கடிதத்தை கலைஞர் அவர்கள் எப்படி எல்லாம் இழுத்தடித்தார் என்பதை காங்கிரஸ் மறந்திருக்க முடியாது. தன் மருமகன், தயாநிதி மாறன், முதன்முறை எம்.பி.ஆக இருந்தாலும், அவருக்கு கேபினட் மந்திரி வழங்க வேண்டும், அதுவும் அவர் செய்யும் தொழில் சம்பந்தமான இலாகாவே தரவேண்டும், என்பதற்காக காங்கிரசுக்கு திமுக கொடுத்த 'நெருக்குதல்’ எவ்வளவு என்பதை, இன்னும் அந்த “வடு” மறையாமல் இருக்கும், காங்கிரஸ் மறந்திருக்க முடியாது.

இன்னும், இந்த “நம்பிக்கைக்குரிய பங்காளிகளின்’ சரித்திரத்தை இன்னும் புரட்டிப்பார்த்தால், 1996ல், காங்கிரசை உடைத்து, தமிழ்மாநில காங்கிரசை ஏற்படுத்தி தன்னோடு சேர்த்துக் கொண்டதை சொல்லலாமா? அல்லது 1971ல், "சோலையின் நடுவே குடியிருக்கும் சோஷலீச சிற்பி இவர்தான்” என் திருமலை பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜர் அவர்களின் வீட்டை காட்டி கேலிப்பிரச்சாரம் செய்ததை சொல்லலாமா?.

இல்லை, 1976 ஜனவரி 30 அன்றும், 1991 லும், ஜனநாயக மரபுகளை மீறி திமுக ஆட்சியை ‘டிஸ்மிஸ்” செய்ததை சொல்லலாமா?

இவையெல்லாம் சரித்திரம்... காலம் கடந்தவை... மறந்து போயிருக்கலாம்... ஆனால், வெறும் 2 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 15, 2013ம் ஆண்டு திமுக பொதுக்குழுவில், கலைஞர் அவர்கள் பேசியதை பாருங்கள்...

"நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்துவிடுவோம் என்று நீங்கள், ஒருபோதும் என்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துரோகத்தை ஏற்படுத்தியும், கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். பூஜ்ஜியங்களை போட்டு திமுகவை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவைத்து விட்டார்கள்.’

இப்படி பேசிய பிறகும் தன்மானத்தை வெந்நீரில் கரைத்துவிட்டு, இவர்கள் சேர்ந்த கூட்டணியின் முதல் வாசகமே, "வென்றால் ஆட்சியில் இடம்பெறுவது முக்கியமல்ல’ என குலாம்நபி ஆசத் சொல்லியிருப்பது, தமிழ்நாடு காங்கிரஸ்காரர்களை பொங்கி எழச்செய்திருக்க வேண்டும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முறி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ, ஆசாத்தோடு பொட்டிப்பாம்பாக சென்று கலைஞர் வீட்டுவாசலில் ஆசாத் முழங்கியதற்கு சாட்சியாக இருந்துவிட்டு வந்திருக்கிறார்.

2014 தேர்தலில் காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பானது. 2015ல் தமிழக காங்கிரஸ் ஒட்டுமொத்தத்தையும் ஜி.கே.வாசன் டி.எம்.சி.யாக பிரித்து சென்றுவிட்டார். கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருந்த காங்கிரசையும் குலாம்நபி ஆசாத் வந்து சென்னை கூவத்தில் கரைத்து சென்றுவிட்டார்.

அதுவும் 1967ல் இருந்து தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த கலைஞர் கையாலேயே காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது வருத்தமாகத்தான் உள்ளது."

இப்படி அறிக்கை வெளியிட்டு திமுக- காங்கிரஸ் கூட்டணியை வெளுத்து வாங்கி இருக்கிறார் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close