Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கள் கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்துக்கு நல்லது: திருமாவளவன் நம்பிக்கை!

திருச்சி: மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றால் விஜயகாந்துக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது என்று தொல்.திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான். இதற்கு முன் பலமுறை இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து தேர்தல்களை சந்தித்துள்ளன. அ.தி.மு.க., தி.மு.க.வை விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் இளங்கோவன்,  வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வந்தார்.

ஆனால், மாநில தலைமை முடிவை மதிக்காமல் கூட்டணி என்பதை டெல்லி தலைமை அறிவித்துள்ளது. தேசிய கட்சிகள் பொதுவாக மாநில தலைமை எடுக்கும் முடிவுகளை மதிப்பதில்லை. தி.மு.க., காங்கிரசும் இணைந்து ஊழலையும், மதுவையும் விரட்ட வாய்ப்பில்லை. கொள்கை அடிப்படையில் இரு கட்சிகளும் எந்த முடிவையும் எடுக்க முடியாது.

மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வெளிப்படையாக அழைப்பு விடுத்தோம். தற்போது மீண்டும் அழைக்கிறோம். எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றால் விஜயகாந்துக்கும் நல்லது. நாட்டுக்கும்,  மக்களுக்கும் நல்லது. அதனால் விஜயகாந்த் நல்ல முடிவை எடுத்து விரைவில் அறிவிப்பார் என நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close