Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேர்காணல்: 22-ம் தேதி முதல் நடத்துகிறார் விஜயகாந்த்!

சென்னை: தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேர்காணல் வருகின்ற 22-ம் தேதி முதல் நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க. சார்பில் விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வருகின்ற 22-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களுக்கு 22-ம் தேதியும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு 23-ம் தேதியும், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 24-ம் தேதியும், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், மேற்கு சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு 25-ம் தேதியும் நடைபெறும்.

இதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு 26-ம் தேதியும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு 27-ம் தேதியும், நாமக்கல், சேலம், கடலூர் மாவட்டங்களுக்கு 28-ம் தேதியும், திருச்சி, வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்டங்களுக்கு 29-ம் தேதியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மார்ச் 1-ம் தேதியும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.

நேர்காணலுக்கு வருபவர்கள் கட்சியின் உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனித்தொகுதிக்கு தேவையான சாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ