Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு நள்ளிரவில் கடிதம் அனுப்பிய தமிழக அரசு!

ட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு நள்ளிரவில் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தை சட்டசபை துணைச் செயலாளர் ஒருவர் வழங்கியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து கடந்தாண்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

இதனிடையே, சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் 15ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 11 மணியளவில் சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் பற்றிய கடிதம், சட்டசபை துணைச் செயலாளர் ஒருவர் மூலம் 6 பேருக்கும் கொடுக்கப்பட்டது. பொதுவாக இது பகலிலேயே தரப்படும் கடிதமாகும்.

மேலும், விடுதிக்கான கதவுகளையும் திறந்து விட்டதாக அந்த அதிகாரி கூறியிருந்தார். அதன் பிறகுதான் 6 பேரும் சட்டசபையில் அனுமதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் தெரிவித்தார். அவர்களில் சேகர் தவிர மற்ற 5 பேரும் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ