Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கண்டிப்பாக இணையும்: இளங்கோவன் நம்பிக்கை!

மதுரை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கண்டிப்பாக இணையும் என்று இளங்கோவன் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கைகளை கேட்பதற்குகூட அரசு தயாராக இல்லை.

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மேலும், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கண்டிப்பாக இணையும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளங்கோவன் மேற்கூறியவாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close