Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா அமைச்சர் திடீர் நீக்கம்; கட்சி பதவியும் பறிப்பு!

சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


மேலும் திருவள்ளூர்  மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவியில் இருந்தும் ரமணா நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஜெயலலிதா, பால்வளத்துறையை அமைச்சர் ப.மோகன் கூடுதலாக கவனிப்பார் என தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பரவிய புகைப்பட சர்ச்சையில் ரமணா சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவி பறிப்புக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டாலும், வேறு சில காரணங்களும் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close