Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா பிறந்தநாள்- எம்.எல்.ஏ.வின் அசத்தல் ஜலபிரதட்சணம் ( வீடியோ)

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி,  கட்சியின் முக்கிய புள்ளிகள் ஒவ்வொரு விதமாக கொண்டாடி அசத்தி வருகிறார்கள். இதில் மதுரை மாவட்டம், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா வித்தியாசமாக ஜலபிரதட்சணம் செய்தார்.
 


மற்றவர்கள் மாதிரி பணம் செலவு செய்யாமல், கூட்டம் சேர்க்காமல், தன் உடம்பு தன் உரிமை என்ற அடிப்படையில் மதுரை காந்தி மியூசியம் அருகிலுள்ள அரசு நீச்சல் குளத்தில் காலை ஏழு மணிக்கு இறங்கினார். மல்லாக்க படுத்துக்கொண்டு நீரில் மிதக்க ஆரம்பித்தார். கட்சியினரும், பொது மக்களும் குரலி வித்தையை பார்ப்பதுபோல் பார்க்க ஆரம்பித்தனர். இன்றைய நாள் முழுவதும் மிதக்க போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரம் மட்டும் மிதந்துவிட்டு,  'அம்மா வாழ்க...அம்மா வாழ்க...!' என்று கோஷம் போட்டு கிளம்பி விட்டார்.



 அடிக்கடி இப்படி மிதப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது சோழவந்தான் கோயில் கிணற்றுக்குள் அரை நாள் மிதந்தார். காசு செலவில்லாமல் நிகழ்ச்சி நடத்துவதில் அதிமுகவில் இவர்தான் கில்லி என்கிறார்கள்.

-செ.சல்மான்

படங்கள், வீடியோ: ஈ.ஜெ.நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close