Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கிங்' குக்கெல்லாம் இங்கே வேலை கிடையாது..!'- விஜயகாந்தை விளாசும் அன்புமணி

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் பா.ம.க.வின் மாநில மாநாடு நடைபெறுகின்றது. மாநாடு நடக்க கூடிய இடம் வழக்கில் உள்ளதால் வருவாய் துறையினர் மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.

உயர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று, பிப்ரவரி 14-ம் தேதியன்று மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த நிலையில் 11-ம் தேதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, மீண்டும் 12-ம் தேதி அனுமதியளித்தது.

இதைத் தொடர்ந்து 27-ம் தேதி மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டுக்கான பணிகளை பார்வையிட வந்தார் அன்புமணி ராமதாஸ்.

பணிகளை பார்வையிட்டபிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, "பாமகவின் இந்த மாநாடு எந்த கட்சியும் இதுவரை நடத்தாத அளவு சிறப்பாக அமையும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். இந்த தேர்தலுக்கு இறுதி பிரச்சாரமாக இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்திருந்தார்கள். அன்றிலிருந்து எங்கள் வேலைகளை தொடங்கி இருக்கிறோம். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, அரியலூர், விழுப்புரம், சேலம் ஆகிய எட்டு மண்டலங்களிலும் மாநாடு நடத்தினோம். இறுதியாக மாநில மாநாடு வண்டலூரில் நடைபெற இருக்கின்றது.

நாளை (24.02.2016) பாட்டாளி மக்கள் கட்சியின் பாடல்கள் வெளியிடப்படும். விஜயகாந்த் எந்த பக்கம் வெயிட் அதிகமாக இருக்கின்றதோ அந்தபக்கம் சாய்வார். ரெண்டு பக்கமும் புடிச்சிகிட்டா சாயாம இருப்பார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே ‘கிங்’க்கெல்லாம் வேலை கிடையாது. ஒருவேளை 200 ஆண்டிற்கு முந்தைய மனநிலையில் அவர் இருக்கின்றார்.

மக்கள் நலக்கூட்டணியில் நாங்கள் முன்கூட்டியே முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கமாட்டோம். இது ஜனநாயக கூட்டணி என்றெல்லாம் சொன்னார்கள். அந்த கூட்டணி பெருங்காயம் போல கரைந்து போய்விடும். இப்போது விஜயகாந்த் வந்தால் முதல்வர் வேட்பாளராக அவரை பரிசீலிப்போம் என்கிறார்கள்" என்று போட்டு தாக்கினார்.

-பா.ஜெயவேல்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ