Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதியுடன் மனக்கசப்பா? ஸ்டாலின் நகைப்பு பதில்!

தலைவர் கருணாநிதிக்கும் எனக்கும் மனக்கசப்பு இருப்பதாக வெளியான செய்திகள் நகைப்பிற்குரியது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி முதல் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேற்று 3வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்திய நேர்காணலின்போது, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கருத்து கேட்டனர்.
 

நேர்காணல் தொடங்கும் முன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

தி.மு.க. நேர்காணல் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.


எங்கள் கட்சியின் நேர்காணல் சிறப்புடன் எழுச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறதே?

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே எனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுங்கள் என கூறியிருக்கிறேன். ஆனால், இந்தியாவிலேயே ஒரு முதலமைச்சரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது தமிழகத்தில் தான் நடைபெறுகிறது.

உங்களுக்கும் தலைவர் கருணாநிதிக்கும் மனக்கசப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதே?


தலைவர் கருணாநிதிக்கும் எனக்கும் மனக்கசப்பு இருப்பதாக வெளியான செய்திகள் நகைப்பிற்குரியது.

உங்களது முடியட்டும், விடியட்டும் விளம்பரத்திற்கு அ.தி.மு.க. சார்பில் வாட்ஸ் அப்பில் விமர்சனங்கள் வெளி வந்தபடி உள்ளதே?


முடியட்டும் விடியட்டும் விளம்பரம் கொடுப்பது தொடரத்தான் செய்யும். பதிலுக்கு அவர்கள் கருத்துக்களை தெரிவிப்பது அவர்கள் கடமை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ