Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விந்தியா பிஸி... கோகுல இந்திரா வர்றாங்க... அலர்ட்டாகிக்கோங்க கேப்டன்!

திமுகவின் உறுதி முழக்க மாநாடு (காஞ்சி, ஒரகடம் ஆப்பூர் பகுதியில்), தேமுதிகவின் 'அரசியல் திருப்பு முனை மாநாடு' (காஞ்சி, வேடல் கிராமத்தில்) என்று இரண்டு பெரிய அரசியல் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கின்றன காஞ்சி மண்ணில்.

அதிலும் கடந்த 20-ம் தேதி நடந்த தேமுதிகவின் மாநாட்டில் உஷ்ணம் கொஞ்சம் தூக்கல்தான். பா.ம.க. மாநாடும் இதே காஞ்சிபுரம் (வண்டலூர்) மாவட்டத்தில் நடக்கவுள்ளது. மக்கள் நலக் கூட்டணிதான் நால்வராக கூடிப்பேசி மாநாட்டை திருச்சிக்கு கொண்டு போய் வைத்து விட்டனர்.

மாநாட்டில் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, "துணிச்சல் இருந்தால் 234 தொகுதிக்கும் வேட்பாளர்கள் லிஸ்ட்டை ஜெயலலிதா அறிவிக்கத் தயாரா, சவாலா, யாரை ஏமாற்றப் பார்க்கறீங்க...? நம்ம கேப்டன் யாரோடு கூட்டணி என்று சொல்லப் போவதைக் கேட்டுவிட்டு, அதன் பின்னர் கூட்டணியை அறிவிக்க காத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று ஜெயலலிதாவை நேரடியாகவே போட்டுத் தாக்கினார்.

பிரேமலதாவின் பேச்சுக்கு கார்டன் அதற்கடுத்த நாளே காட்டிய 'லேசான' ரியாக்‌ஷன்தான், தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ஜெ.வுக்காக ராஜினாமா செய்தது...  இதன் தொடர்ச்சியாக விஜயகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனது. விவகாரம் இத்தோடு நிற்கவில்லை. அடுத்தக்கட்ட வேலைகள் ஆரம்பித்து விட்டன. சென்னையின் நான்கு மாவட்டச் செயலாளர்கள், காஞ்சிபுரத்தின் மூன்று மாவட்டச் செயலாளர்கள், திருவள்ளூரின் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாட்டில்,  இதே லிஸ்ட்டில் வருகிற 9 மகளிரணி மாவட்டச் செயலாளர்கள், மாநில மகளிரணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மந்திரி கோகுல இந்திரா தலைமையில் அதே காஞ்சிபுரத்தின் 'வேடல்' பகுதியில் பிரமாண்ட  மகளிரணி மாநாட்டுக்கு ஏற்பாட்டை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதிமுகவையும், ஜெயலலிதாவையும் முடிந்தவரையில் வறுத்தெடுத்த பிரேமலதாவை வறுத்தெடுப்பதற்கான வேலைகள் துரிதமாக, அதே சமயம் சத்தமே இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டில் ஜெயலலிதாவின் பிரதிநிதியாக களத்தில் நின்று கவுன்ட்டர் கொடுக்க இறக்கி விடப்பட்டிருக்கும் மந்திரி கோகுல இந்திரா, அதற்கான பிரமாண்ட பந்தல், அம்மா மட்டுமே இருக்கிற பிரமாண்ட கட் அவுட் ஆகியவைகளை,  எங்கே எப்படி நிறுவுவது என்ற வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

மாவட்டச் செயலாளர்களான எம்.எம்.பாபு, பூங்காநகர் சீனிவாசன், வெற்றிவேல், தி.நகர் சத்யா (சென்னை), அமைச்சர்கள் சின்னையா, அப்துற் றஹீம் மற்றும் சிறுணியம் பலராமன் , வாலாஜாபாத் கணேசன், தண்டரை மனோகரன் (திருவள்ளூர்-காஞ்சிபுரம்) ஆகியோர் ஒரே நேரத்தில்,  மகளிரணியின் 9 மாவட்டங்கள் ஒன்றாக களமிறங்கும் மாநாட்டுப் பணிகளை வெற்றி பெற வைக்கும் முடிவில் காஞ்சியில் முகாமிட்டுள்ளனர்.

  மார்ச் 1-ம் தேதி கோகுல இந்திரா நடத்தும் மகளிரணி மாநாட்டின் வெற்றி குறித்த தகவலைப் பெற்றதும் அதே சூட்டோடு, வேட்பாளர் பட்டியலின் முதல் லிஸ்ட் வெளியாகளாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தன்னுடைய சொந்தத் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா செல்கிறார். அங்கே தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர்,  அடுத்தடுத்த பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் குறித்த முடிவை வெளியிடுகிறார்.

"ஆமாம்... ஏன் காஞ்சிபுரம் மகளிரணி மாநாட்டுக்கு முதல்வர் போகவில்லை ?" என்ற கேள்வியை காஞ்சிபுரம் ர.ர.க்கள் மத்தியில் வைத்தோம்.

"அட நீங்க வேற... விஜயகாந்துக்கு பதில் சொல்ல அம்மாவே நேரடியாக வந்துட்டாங்க பாத்தியா" ன்னு அவங்காளுங்க ஒரு மாதிரி வில்லங்கமா பேசுவாங்க. விஜயகாந்துக்கு பதில் சொல்ல நாங்க மந்திரி கோகுல இந்திராவை அனுப்பறதே கொஞ்சம் ஜாஸ்திதான்... விந்தியா 'டேட்' கிடைக்கலை" என்கின்றனர்.

ஆக, காஞ்சிபுரம் மாநாட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மந்திரி கோகுல இந்திரா கொடுக்க உள்ள பதிலடி பேச்சு எப்படி இருக்கும் என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

 -ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close