Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை...!'- நெல்லையை கலக்கும் அதிமுக போஸ்டர்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை என அ.தி.மு..கவினரே ஒட்டிய போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்ட அ.தி.மு.கவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன், கட்சித் தலைமையால் ஓரங்கட்டப்பட்டதால் கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமல் உள்ளார். வரும் சட்ட மன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் ‘சீட்’ வழங்கப்படுமா? என கட்சிக்குள் பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதங்கள் வலுத்து வருகின்றன. இதனால் அவர் வெற்றி பெற்ற நெல்லை சட்டமன்ற தொகுதியை குறி வைத்து ஆளுங்கட்சியை சேர்ந்த பலரும் காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் அடிப்பகுதியில்,  இன்று ஒரு விநோத போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், நயினார் நாகேந்திரன் புகைப்படத்துடன் ‘எம்.எல்.ஏ-வை காணவில்லை’ என தலைப்பிடப்பட்டு இருந்தது. அத்துடன், ‘இரண்டு ம்முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அவருக்கான சிறப்பு தகுதி இரு துறைகளில் அமைச்சராக இருந்தது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் அந்த போஸ்டரில், ‘10 வருடங்களாக நயினாரின் குடும்ப சொத்து 500 கோடி எப்படி? செய்த சாதனை- தமிழகம் முழுவதும் 46 ஹோட்டல்கள் எப்படி? சென்னையில் 5 ஸ்டார் ஹோட்டல்கள் எப்படி? செய்த சாதனை- கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி மண்ணை மிதிக்கவில்லை. சட்டமன்ற அலுவலகத்தை திறக்கவில்லை. தனித்திறமை- கடந்த நான்கரை வருடமாக சட்டமன்றத்தில் மௌனமாக யோகா பயிற்சி மேற்கொண்டது. லட்சியம்- 2016 தேர்தலில்,  நெல்லை தொகுதியில் மக்களுக்கு கும்பிடு போட்டு 15 கோடி பரிசாக கொடுத்து மீண்டும் எம்.எல்.ஏ. ஆவது’ என காட்டமாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும், வெகு விரைவில் நயினார் நாகேந்திரனின் சொத்துக்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அந்த போஸ்டரில் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த போஸ்டரை, அ.தி.மு.க-வில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு எதிரான அணியினர் ஒட்டியதாக தெரிகிறது. சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் விவகாரம் ஆளுங்கட்சியினரிடம் மட்டும் அல்லாமல் மாற்றுக் கட்சியினரிடமும் பரபரப்பான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

-ஆண்டனிராஜ்

படம்:  எல்.ராஜேந்திரன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close