Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்டித்தொட்டி எங்கும் வருகிறது அதிமுகவின் அதிநவீன பிரச்சார வாகனம்!

திநவீன தொழில்நுட்ப பிரச்சார வாகனங்களை அமைச்சர்களிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " தமிழ் நாட்டில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, முதலமைச்சர் அம்மாவின் தலைமையிலான கழக அரசு செயல்படுத்தி வரும் புரட்சிகரமான எண்ணற்ற திட்டங்கள் பற்றிய முழுமையான விழிப்புணர்வை பட்டிதொட்டி எங்கும் வாழும் மக்கள் அனை வரும் பெற்றிடும் வகையிலும், ஒளிபரப்பப்படும் படக் காட்சிகளை எந்தக் கோணத்தில் இருந்தும் மக்கள் ஒரே நேரத்தில் துல்லியமாகக் கண்டு ஒளி, ஒலிக் காட்சிகள் மூலம் தகவல்களைப் பெறும் வகையிலும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு திருவாரூர், கோவை, புறநகர், ஈரோடு புறநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
 

இந்த பிரச்சார வாகனங்களின் சாவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று, அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, தோப்பு வெங்கடாச்சலம், விஜய பாஸ்கர் ஆகியோரிடம் வழங்கினார்.

அ.தி.மு.க. அரசின் மகத்தான சாதனைகளையும், எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களையும், முறையே, திருவாரூர், கோவை புறநகர், ஈரோடு புறநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பிரச்சாரப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி, தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்