Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஜகவுடன் தேமுதிக கூட்டணியா?அடுத்தவாரம் தெரியும்: பாஜக ஜவடேகர்!

சென்னை: தேமுதிக  பாஜகவுடன் கூட்டணி சேருமா இல்லையா என்பது  அடுத்தவாரம் தெரியும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் ஜவடேகர்  நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் இன்று(ஞாயிறு) அவருடன் ஜவடேகர் சந்தித்துப் பேசினார்.40 நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜவடேகர் கூறுகையில்,

"விஜயகாந்த்துடன் நடந்த சந்திப்பால் மகிழ்ச்சி அடைகின்றேன். சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. பயனுள்ளதாக இருந்தது.கடந்த 24 மணி நேரத்தில், எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் நான் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆலோசனைகள் குறித்து பாஜக தலைமையிடம் தெரிவிப்பேன். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் வரும் வாரம்  தமிழகம் வருவேன். கூட்டணி தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் தெரியவரும். தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்பது குறித்து இறுதியான முடிவை விஜய்காந்த் எங்களிடம் கூறவில்லை. " என்றார்.

மேலும் அவர்,  தமிழகத்திற்கு அனைத்து வகையிலும்  மத்திய அரசு உதவி செய்து வருகிறது. தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பணம் மத்திய அரசு வழங்கியது. மத்தியில் மோடி தலைமையில்  சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. அதுபோல் தமிழகத்திலும் அரசியல் மாற்றம் ஏற்படும்.கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிகள்தான்  மாறியுள்ளன. ஆனால் காட்சிகள் மாறவில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியானது" என்றும் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close